
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூளையை உபயோகித்து, சற்று மாற்றி யோசித்தால் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்பதை, நிரூபித்து காட்டியுள்ளார், கனடா நாட்டைச் சேர்ந்த, 32 வயது இளம் பெண், ஜெசிகா.
இலவம் பஞ்சு போன்ற, தன் மென்மையான பாதங்களை வித்தியாசமான கோணங்களில், புகைப்படம் எடுத்து, 'அழகான பாதங்களை பார்க்க வேண்டுமா; சிறிதளவு சந்தா செலுத்துங்கள்...' என்ற அறிவிப்புடன், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மூலம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 50 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார், ஜெசிகா.
— ஜோல்னாபையன்.

