
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனிமை
தனியாகவே வந்து
தனியாகவே போக வேண்டிய
நமக்கு தனிமை கண்டு
அச்சம் ஏன்?
குழந்தைக்கு தனிமை
கண்ணுறக்கம் கொள்ள
இளமையில் தனிமை
கல்வியில் செம்மை பெற...
வேலையில் தனிமை
கவனிக்கும் திறன் அதிகரிக்க
நடு வயதில் தனிமை
நம்மை புரிந்து கொள்ள...
முதுமையில் தனிமை
முன் நாட்களை அசை போட்டு
முற்றும் துறக்க...
இருந்தும், தனிமையை
விரட்ட என்னவெல்லாம்
செய்கிறோம்...
தனிமைப்படுவதற்கும்
தனிமைப்படுத்துவதற்கும்
வேற்றுமை உண்டு!
கூடலில் பிறந்து
குடும்பத்தில் வாழ்ந்து
கும்பலில் கலந்து
கூச்சலில் தவிக்கும்
இந்தியக் குடிமகன்
தனிமை கண்டு
அச்சம் கொள்வதில்
ஆச்சர்யம் இல்லை!
— தேவவிரதன், சென்னை.

