/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணிவாய்ப்பு
/
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணிவாய்ப்பு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணிவாய்ப்பு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணிவாய்ப்பு
PUBLISHED ON : ஜூன் 20, 2017

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை 'ஆசிரியர் தேர்வு வாரியம்' எனப்படும் டி.ஆர்.பி., அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 1058 ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பணியிடங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிரப்பபட உள்ளன.
காலியிட விபரம் : சிவில் இன்ஜினியரிங்கில் 112, மெக்கானிக்கலில் 219, எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்சில் 91, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் 118, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் பிரிவில் 3, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 134, ஐ.டி., மற்றும் புரொடக்சனில் தலா 6, டெக்ஸ்டைலில் 3, பிரின்டிங் டெக்னாலஜியில் 6, ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தலா 88, இயற்பியலில் 83, வேதியியலில் 84, மாடர்ன் ஆபிஸ் பிராக்டிசில் 17 சேர்த்து மொத்தம் 1058 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது : 01.07.2017 அடிப்படையில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உரிய பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அப்பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இருக்கும். எழுத்துத்தேர்வு 2017 ஆக., 13ல் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய்.
கடைசி நாள் : 2017 ஜூலை 7.
விபரங்களுக்கு : www.trb.tn.nic.in

