/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அலுமினியம் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா
/
அலுமினியம் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா
PUBLISHED ON : ஜூன் 20, 2017

நேஷனல் அலுமினியம் கார்ப்பரேஷன் என்பது நால்கோ என்று அறியப்படுகிறது. அலுமினியம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தின் கோல்கட்டா மையத்தில் 330 டிரேடு அப்ரென்டிஸ்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் : எச்.ஆர்.டி., பிரிவில் 99 இடங்களும், லேண்ட் செல்லின் பி.டி., பிரிவில் 97ம், நிர்வாகத்துறையில் 24ம், டாகுமென்ட் வெரிபிகேஷன் கமிட்டியில் 110ம் சேர்த்து மொத்தம் 330 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவை என்ன: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : டிரேடு அப்ரென்டிஸ் பதவிக்கு தேவைப்படும் போர்டலில் சென்று முதலில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நகலுடன் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிய இணைப்புகளையும் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Manager (HRD)-Training, HRD Centre, Alumina Refinery, NALCO, M & R Complex, Damanjodi, Koraput District, ODISHA 763 008.
கடைசி நாள் : 01.07.2017
விபரங்களுக்கு <http://www.govtjobsclub.in/wp-content/uploads/2017/06/nalco-apprentices1.pdf>

