/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
விசாகப்பட்டினம் இரும்பு நிறுவன பணிவாய்ப்புகள்
/
விசாகப்பட்டினம் இரும்பு நிறுவன பணிவாய்ப்புகள்
PUBLISHED ON : ஜூன் 20, 2017

ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் லிமிடெட் என்பது விசாகப்பட்டினம் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இங்கு காலியாக உள்ள ஜூனியர் டிரெய்னி மற்றும் பீல்டு அசிஸ்டென்ட் டிரெய்னி பிரிவுகள் சார்ந்த 736 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம் : பீல்டு அசிஸ்டென்ட் டிரெய்னி பிரிவில் 91 இடங்களும், ஜூனியர் டிரெய்னி பிரிவு சார்ந்த மெக்கானிக்கலில் 344, எலக்ட்ரிகலில் 203, மெட்டலர்ஜியில் 98 சேர்த்து 645 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
வயது : 01.03.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விசாக் ஸ்டீல் அறிவித்துள்ள இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க ஐ.டி.ஐ., அல்லது டிப்ளமோ படிப்பை தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஜூனியர் டிரெய்னி பதவிக்கு இதற்கு மேற்பட்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்ற போதும், பீல்டு அசிஸ்டென்ட் டிரெய்னி பதவிக்கு கூடுதல் தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300/-ஐ இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க : விசாக் ஸ்டீல் நிறுவன காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 21.06.2017
விபரங்களுக்கு : http://www.vizagsteel.com/code/tenders/jobdocs/21065final%20JT%20&%20FAT%20Advt.pdf.

