/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய அரசு பள்ளிகளில் 7267 காலியிடங்கள்
/
மத்திய அரசு பள்ளிகளில் 7267 காலியிடங்கள்
PUBLISHED ON : செப் 23, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் பழங்குடியினருக்கான ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் (EMRS) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர் 225, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 1460, இளநிலை பட்டதாரி ஆசிரியர் 3962, அக்கவுண்டன்ட் 61, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 228, ஆய்வக உதவியாளர் 146, விடுதி வார்டன் 635, நர்ஸ் 550 என மொத்தம் 7267 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு + பி.எட்., / பி.காம்., / பிளஸ் 2 / டிப்ளமோ / பி.எஸ்சி., நர்சிங்.
வயது: 18-50 (23.10.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2500/ 2000/1500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசிநாள்: 23.10.2025
விபரங்களுக்கு: emrs.tribal.gov.in/site/recruitment

