தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமானப் படையின் பணியறிவிப்பு

விமானப் படையின் பணியறிவிப்பு

விமானப் படையின் பணியறிவிப்பு


PUBLISHED ON : ஏப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் மிகச் சிறந்த ராணுவப் பிரிவுகளில் ஒன்றாகத் திகழும் இந்திய விமானப் படை அவ்வப்போது பணிவாய்ப்புகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ராணுவப் பிரிவில் அதிநவீன விமானங்கள் உள்ளன. மிகச் சிறந்த பயிற்சிகள், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை, மனதளவில் நிறைவைத் தரும் பணிச்சூழல் என்று இந்த படையில் பணியாற்றுபவர்கள் பல சிறப்புகளைப் பெறுகிறார்கள்.

நாட்டின் மிக முக்கிய பணிகளில் ஒன்றில் ஈடுபடுவதில் உள்ள மன நிறைவே அலாதியானது தான். தற்போது இந்திய விமானப் படையில் லோயர் டிவிஷன் கிளார்க், ஸ்டோர் கீப்பர், பெயிண்டர் மற்றும் பிட்டர் மெக்கானிக் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:



இந்திய விமானப் படையின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். லோயர் டிவிஷன் கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இத்துடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஸ்டோர் கீப்பர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பெயிண்டர் மற்றும் பிட்டர் மெக்கானிக் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மற்ற தகவல்கள்:



மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் உரிய படிவ மாதிரியில் தங்கள் விண்ணப்பங்களை நிரப்பி, தங்கள் சான்றிதழ் நகல்களை கெசடடு அதிகாரியிடம் சான்று பெற்று பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியலாம்.

முகவரி:



The HQ Maintenance Command,

New Delhi - 110003

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :



18.04.2013

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us