PUBLISHED ON : ஏப் 08, 2013

அ நிறம் | அளவு
தூர்தர்சன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகிய மத்திய அரசுத் துறை அமைப்புகளில் புரொகிராம் எக்சிகியூடிவ் மற்றும் டிரான்ஸ்மிசன் எக்சிகியூடிவ் ஆகிய 2 பணிகளுக்கான 1238 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெடுநாட்களாக இந்தப் பணிகளுக்காக எந்த பணிவாய்ப்பும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் இதே பணியில் ஏற்கனவே பணியாற்றி வரும் பலரும் ஓய்வு ஒழிச்சலின்றி பல ஆண்டுகளாக அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.எஸ்.சி., என்னும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் இந்த 2 பணிகளுக்கான வாய்ப்பை அறிவித்துள்ளது.தகுதிகள்:
புரொகிராம் எக்சிகியூடிவ்
*எம்.ஏ.,எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக நாடகம்/இலக்கியம்/கலை தொடர்பான சிறப்புத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது எடிட்டிங்/ஆக்டிங்/ஆர்ட் டைரக்சன்/புரடக்சன் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
*மொழித் திறன் பெற்றிருப்பதும் அவசியம்.
*எம்.பி.ஏ., கம்ப்யூட்டர் திறன்கள் பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.
டிரான்ஸ்மிசன் எக்சிகியூடிவ்:
*வெவ்வேறு திறன்களைப் பெற்றிருப்பவருக்கான பணி இது என்பதால் அதற்கேற்ப தகுதிகளும் மாறிடும். எனவே முழு விபரங்களையும் பார்த்துக் கொள்ளவும்
தேர்வு முறை:
கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிய: www.prasarbharati.gov.in
