PUBLISHED ON : ஏப் 21, 2026

அ நிறம் | அளவு
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 125, எலக்ட்ரிக்கல் 65, எலக்ட்ரானிக்ஸ் 50, கெமிக்கல் 40, சிவில் 35, இன்ஸ்ட்ரு மென்டேசன் 15 என மொத்தம் 330 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-26 (30.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: GATE தேர்வு (2024 / 2025 / 2026) மதிப்பெண், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணமில்லை.
கடைசிநாள்: 30.4.2026
விவரங்களுக்கு: npcilcareers.co.in
