PUBLISHED ON : ஜூன் 09, 2026

அ நிறம் | அளவு
மத்திய சுகாதார துறையின் கீழ் செயல்படும் எச்.எல்.எல்., பயோடெக் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மைக்ரோ பயாலஜி, வேதியியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் ஜூனியர் ஆபிசர் 29, ஜூனியர் சூப்பர்வைசர் 10 என மொத்தம் 39 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-40 (30.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.6.2026
விவரங்களுக்கு: hllbiotech.com
