எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் வாய்ப்பு
எல்.ஐ.சி., நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட் வாய்ப்பு
PUBLISHED ON : ஏப் 21, 2026

அ நிறம் | அளவு
எல். ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஜூனியர் அசிஸ்டென்ட்' பிரிவில் கர்நாடகா 29, மஹாராஷ்டிரா 25, தெலுங்கானா 24, தமிழகம் 21, ம.பி., 18 உட்பட மொத்தம் 180 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 21-30 (1.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தஞ்சாவூர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.4.2026
விவரங்களுக்கு: lichousing.com
