PUBLISHED ON : அக் 28, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஹாஸ்பிடாலிட்டி மானிடர்ஸ்' (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்) பிரிவில் மொத்தம் 64 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ.,
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 18-28 (15.11.2025ன் படி)
ஒப்பந்த காலம்: மூன்றாண்டு
ஊதியம்: மாதம் ரூ. 30 ஆயிரம்
தேர்ச்சி முறை: பூர்த்தி செய்த விண்ணப்பம், அசல் சான்றிதழ் களுடன் 'வாக் இன்' இன்டர்வியூவில் பங்கேற்க வேண்டும்.
இடம்: CIT Campus, Taramani, Chennai -- 600 113.
நாள்: 15.11.2025
விவரங்களுக்கு: irctc.com

