/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஆயுத போலீஸ் படையில் 4187 எஸ்.ஐ., பணியிடங்கள்
/
ஆயுத போலீஸ் படையில் 4187 எஸ்.ஐ., பணியிடங்கள்
PUBLISHED ON : மார் 12, 2024

டில்லி போலீசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
சப் இன்ஸ்பெக்டர் பதவியில் டில்லி போலீசில் 186, மத்திய ஆயுத போலீஸ் படையில் 4001 என மொத்தம் 4187 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.8.2024 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலுார், திருநெல்வேலி,புதுச்சேரி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்: 28.3.2024
விவரங்களுக்கு: ssc.gov.in