
தமிழக போலீசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் ரிப்போர்ட்டர் பிரிவில் 54 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தமிழ் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழில் சுருக்கெழுத்து சான்றிதழ், ஆங்கிலத்தில் தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2023 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004
கடைசிநாள்: 15.4.2024
விவரங்களுக்கு: eservices.tnpolice.gov.in