/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
கிராம வங்கியில் 9995 உதவியாளர் காலியிடங்கள்
/
கிராம வங்கியில் 9995 உதவியாளர் காலியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 11, 2024

இந்தியாவிலுள்ள கிராம வங்கிகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ளது.
அலுவலக உதவியாளர், ஜெனரல் பேங்கிங் ஆபிசர், ஐ.டி., சட்டம், சி.ஏ., கருவூல அதிகாரி, மார்க்கெட்டிங் ஆபிசர், அசிஸ்டென்ட் மேனேஜர், விவசாய அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 9995 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 507 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, அதிகாரி பணிஇடங்களுக்கு பைனான்ஸ், மார்க்கெட்டிங், விவசாயம், கால்நடை அறிவியல், ஐ.டி., கம்ப்யூட்டர், சட்டம், பொருளியல், அக்கவுண்டன்சி பிரிவுகளில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழி தெரிந்திருப்பது அவசியம்.
வயது: 1.6.2024 அடிப்படையில் அலுவலக உதவியாளர் 18 - 28, அசிஸ்டென்ட் மேனேஜர் 18 -30, மேனேஜர் 21 - 32, சீனியர்மேனேஜர் 21- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விருதுநகர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175.
கடைசி நாள்: 27.6.2024
விபரங்களுக்கு: ibps.in