PUBLISHED ON : ஆக 30, 2023

தார்ப்பாய் சூரிய கூடாரம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:
மலை மண் சார்ந்த எங்களது செம்மண் நிலத்தில், டிராகன் பழம், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். இதில், வேர்க்கடலை, இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் ஆகியவை ஊடுபயிராக சாகுபடி செய்து வருகிறேன்.
இந்த விளைப்பொருட்களை, மழைக்காலத்தில் உலர்த்துவதில், ஏராளமான சிக்கல்களை நாங்கள் சந்திக்க வேண்டி உள்ளது.
இதனால், தரமான வேர்க்கடலை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைப்பொருட்களை பதப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகின்றன.
இதை தவிர்க்க, பி.வி.சி., பைப்களில் முறையில் கொட்டகை அமைத்து, தார்ப்பாய் முழுதுமாக போர்த்திய பின், சூரிய கூடாரத்தை எளிமையாக உருவாக்கலாம்.
இந்த கூடாரத்தில், மழை மற்றும் வெயில் காலங்களில், விளைப்பொருட்களை உலர்த்தி இருப்பு வைக்கலாம்.
விளைப்பொருட்களை மதிப்பு கூட்டியும் விற்பனை செய்யவும் பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.வெங்கடபதி,
93829 61000.
