தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/கூடுதல் வருவாய்க்கு செங்கோட்டான் சோளம்

கூடுதல் வருவாய்க்கு செங்கோட்டான் சோளம்

கூடுதல் வருவாய்க்கு செங்கோட்டான் சோளம்


PUBLISHED ON : ஆக 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கோட்டான் சோள சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை நிலைய அலுவலர் கே.ஜெயராமன் கூறியதாவது:

செங்கோட்டான் சோளம், வெள்ளைச்சோளம் உள்ளிட்ட பல்வேறு வித சோள ரகங்கள் உள்ளன. சோளம், குறுகிய காலத்தில் விளையக்கூடிய பயிராகும். இது, மனிதர்களுக்கு சிறந்த உணவு மற்றும் ஆடு, மாடுகளுக்கு சிறந்த தீவனமாகவும் உள்ளது.

ஒரு ஏக்கர் பரப்பில், தரமான செங்கோட்டான் சோளம் சாகுபடி செய்தால், 400 கிலோ வரையில் மகசூல் வரும். நீர் மற்றும் உரம் நிர்வாகம் முறையாக மேற்கொண்டால், கூடுதல் மகசூல் பெறலாம்.

செங்கோட்டான் சோளத்தில், குறைந்த அளவு குளுக்கோஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளை காக்கும் சிறந்த உணவாக உள்ளது.

மேலும், கூடுதல் நார்சத்து இருப்பதால், குடல் இயக்கம், இதயம் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, சோள ரவை, லட்டு ஆகிய மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால், கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: கே.ஜெயராமன், 95974 42347.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us