PUBLISHED ON : ஆக 30, 2023

கோழி அம்மை புண்ணை, மூலிகை மருத்துவத்தில் ஆற்றுவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.துரைராஜன் கூறியதாவது:
நாட்டுக்கோழி வளர்ப்பில், வெள்ளைகழிச்சல், அம்மை நோய் ஆகிய பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகமாக வரும். இதனால், நாட்டுக்கோழிகள் இறப்பதோடு, வருவாய் இழப்பு ஏற்பட நேரிடும்.
ஒரு சில கோழிகளில், அம்மை நோய் தாக்கத்திற்கு பின், புண்ணாக மாறும். அது உதிர்ந்து விழுவதற்குள் கோழி தீவனம் சாப்பிட முடியாமல் மேலும் பாதிப்பு ஏற்படும். இதை தவிர்த்த, மூலிகை மருத்துவத்தில், புண்ணை ஆற்றலாம்.
குறிப்பாக, 10 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் துாள், துளசி இலை, 50 கிராம் கற்பூரம், வேப்பிலை, 20 கிராம் சீரகம் ஆகியவை அரைத்து, விளக்கெண்ணெய், வேப்பெண்ணெயை சம அளவில் எடுத்து, சூடுபடுத்தி புண்களில் மீது தட வேண்டும்.
மேலும், 5 மிளகு, 10 கிராம் சின்ன சீரகம், 5 பல் பூண்டு, 5 கிராம் மஞ்சள், 10 வேப்பிலை, துளசி இலை அரைத்த கலவையை, தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.
இதையடுத்து, கால்நடை மருத்துவரின் அறிவுரைபடி முறையாக தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகளை கோழிகளுக்கு வழங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: இரா.துரைராஜன்,
80981 22345.
