களி மண் நிலத்திலும் வளரும் குதிரைவால் சம்பா ரக நெல்
களி மண் நிலத்திலும் வளரும் குதிரைவால் சம்பா ரக நெல்
PUBLISHED ON : ஆக 30, 2023

அ நிறம் | அளவு
குதிரைவால் சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், குதிரைவால் சம்பா ரக நெல்லும் ஒன்றாகும்.
இது, சன்ன ரகமாகும். நடவு செய்து, 125 நாட்களில் நெல் அறுவடைக்கு வரும்.
திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகமாகும். நம்மூர் களி மண்ணிலும் நன்றாக வளர்கிறது. நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
இதில், நோய், பூச்சி தாக்குதல் அறவே இல்லை. ஒரு ஏக்கருக்கு, 25 மூட்டை வரையில் நெல் மகசூல் கிடைக்கும்.
இந்த அரிசியில், நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால், அனைத்து வித சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: என். மகாலட்சுமி,
98414 42193.
