PUBLISHED ON : ஜன 21, 2026

பீட்ரூட் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கலந்த களி மண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன்.
அனைத்து விளைப்பொருட்களுக்கும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன். கார்த்திகை மாதம் பீட்ரூட் சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் மணல் கலந்த களி மண்ணுக்கு அருமையாக விளைச்சல் தருகிறது.
கு ளிர் பிரதேசங்களில் செம்மண்ணில் விளையும் காய்கறி போல பீட்ரூட் பருமனாக இல்லாமல், சற்று குறைவான பருமனுடன் காணப்படுகிறது.
மற்றபடி சுவை மற்றும் சத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறி, பழங்கள், கீரை ஆகிய விளைப்பொருட்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ்,
81109 44475

