/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெல் நாற்றில் வாடல் நோயை கட்டுப்படுத்த உயிர்க்கொல்லி கரைசல்
/
நெல் நாற்றில் வாடல் நோயை கட்டுப்படுத்த உயிர்க்கொல்லி கரைசல்
நெல் நாற்றில் வாடல் நோயை கட்டுப்படுத்த உயிர்க்கொல்லி கரைசல்
நெல் நாற்றில் வாடல் நோயை கட்டுப்படுத்த உயிர்க்கொல்லி கரைசல்
PUBLISHED ON : ஜூன் 04, 2025

நெல் நாற்றில் வாடல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
நாற்றங்காலில், வாடல் நோய் வரும். இந்த நோய், அதிக வெயில், ஈரத்திற்கு வரும். இந்நோய் தாக்கினால், நெல் நாற்றுகள் பச்சை நிறத்தில் இருந்து, வெளிர் நிறத்திற்கு மாறிவிடும். இந்த நாற்றுகளை பறித்து, வயலில் நடும்போது, வயல் முழுதும் நோய் பரவி நெற்கதிரில் மகசூல் இழப்பு ஏற்படுத்தும். இதை தவிர்க்க, ஒரு கிலோ விதை நெல்லுடன், 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிர்க்கொல்லி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்காலில் நோய் அறிகுறி தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருடன், ஐந்து மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்கிற உயிரி உரம் தெளிக்க வேண்டும். இதுதவிர, 200 கிராம் கோசைட் மருந்துடன், 60 கிராம் பேக்டரி மைசின் என்கிற ஆன்டிபயாட்டிக் மருந்தினை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக தெளிக்க வேண்டும்.வானிலைக்கு ஏற்ப மருந்துகளை பயன்படுத்தினால், வாடல் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: -முனைவர் செ.சுதாஷா, திரூர், 97910 15355.