sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

எலுமிச்சையில் குளோன் நாற்றுகள்

/

எலுமிச்சையில் குளோன் நாற்றுகள்

எலுமிச்சையில் குளோன் நாற்றுகள்

எலுமிச்சையில் குளோன் நாற்றுகள்


PUBLISHED ON : ஜூன் 12, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலைகளைக் கொண்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நாற்று உற்பத்தியில் புதுமை படைத்துவரும் எங்கள் 'ஈடன் நர்சரி கார்டன்ஸ் தற்போது எலுமிச்சை மற்றும் மாதுளை நாற்றுகளை 'கட்டிங்' முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.

பொதுவாக எலுமிச்சை நாற்றுக்களை விதைகள், விண்பதியம் மற்றும் ஒட்டுக்கட்டுதல் முறைகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. விதைகள் மூலம் உற்பத்தியாகும் நாற்றுகள் பலன்தர 4-5 வருடங்கள் காத்திருக்க வேண்டிஉள்ளது. விண்பதியம் மற்றும் ஒட்டுக்கட்டும் முறைகள் நாற்றின் உற்பத்திச் செலவை அதிகரிக்கும். மேலும் ஒரு தாய்ச்செடியில் இருந்து குறைவான எண்ணிக்கையில் மட்டுமே நாற்றுக்களை உற்பத்தி செய்ய இயலும். இந்த முறைகளுக்கு மாற்றாக எங்கள் மேட்டுப் பாளையம் ஈடன் நர்சரியில் 'குளோன்' என்று சொல்லப்படும் 'கட்டிங்' முறையில் நாற்றுக்களை உற்பத்தி செய்கிறோம்.

வருடம் முழுவதும் காய்க்கும் நாட்டு எலுமிச்சை மரத்தைத் தேர்வு செய்து, மேலும் பழத்தின் அளவு, நிறம், சாற்றின் அளவு ஆகியவற்றில் மேன்மையாக உள்ள மரங்களில் மட்டும் கட்டிங் எடுத்து, வேர் வரவழைத்து நாற்று உற்பத்தி செய்து வருகிறோம்.

குளோன் நாற்றின் சிறப்புகள்: குளோன் முறையில் உருவாகும் நாற்றுக்கள் இரண்டரை வருடத்தில் பலன்தர ஆரம்பிக்கும். இதனால் விவ சாயிகள் பலனுக்குக் காத்திருக்கும் காலத்தைக் குறைக்க முடியும். விதைமூலம் உருவாகும் செடிகள் அதன் தாய்ச்செடியை ஒத்தே பலன்தரும் என்ற எதிர்பார்க்க முடியாது. ஆனால் கட்டிங் மூலம் உருவாகும் செடிகள் அதன் தாய்ச்செடியின் குணாதிசயங்களை 100 சதவீதம் பெற்றிருக்கும்.

குளோன் முறையில் நாற்றுக்களை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செலவு குறைவதால், குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நாற்றுகளை வழங்குவது எங்கள் நர்சரிக்கு சாத்தியமாகி இருக்கிறது. இந்த முறையில் மாதுளை, கறிவேப்பிலை போன்ற நாற்றுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். மேலும் அரியவகை மரங்கள், விதைகள் மற்றும் இதரமுறைகளில் நாற்று உற்பத்தி செய்ய இயலாத செடி, மர வகைகளில் நாற்று உற்பத்தி செய்யும் எங்கள் ஈடன் நர்சரியின் முயற்சிகள் தொடர்கிறது. பப்பாளியிலும் எங்கள் முயற்சி வெற்றி கண்டுள்ளது.

-எஸ்.ராஜரத்தினம்,

மேட்டுப்பாளையம்-643 301.

94860 94670.






      Dinamalar
      Follow us