PUBLISHED ON : ஜூலை 17, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனங்கிழங்கு சாகுபடி செய்வது குறித்து, மணியாட்சி கிராமத்தைச் சேர்ந்த, டி.கணேசன் கூறியதாவது: ஆடி மாதம் துவக்கத்தில், மரங்களில், முதிர்ந்த பனங்காய்கள், பழமாக பழுக்க துவங்கும். அந்த பழக்கொட்டைகளை தனியாக பிரித்து, உலர்த்த வேண்டும்.
உலர்த்திய பனங்கொட்டைகளை, சவுடு மண் பூமியில், பள்ளம் வெட்டி புதைக்கலாம். மூன்று மாதங்கள் கழித்து, தரமான பனங்கிழங்கு கிடைக்கும். அதை விற்பனை செய்தால், நுங்கில் கிடைக்கும் வருவாயை விட, அதிகம் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 88835 58711

