/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி
/
நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி
நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி
நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி
PUBLISHED ON : ஆக 14, 2024

ஜப்பான் நாட்டின் ஊதா நிற மாம்பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த, கரடிபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.பிரபு கூறியதாவது:
கல் கலந்த சவுடு மண் நிலத்தில், பல்வேறு ரக மா மரங்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், ஜப்பான் நாட்டின் பர்பிள் நிறம் என அழைக்கப்படும் ஊதா நிற மா மரத்தையும் நட்டுள்ளேன்.
இந்த ரக மா மரத்தில், பிப்ரவரி மாதம் பூ பூக்கும். ஜூன் மாதம் பழங்கள் அறுவடைக்கு வரும். பிற ரக மாம்பழங்களை போல, ஊதா நிற மாம்பழத்தில் மகசூல் கிடைப்பதில்லை.
ஒரு காம்பிற்கு ஒரு பழம் தான் மகசூல் கிடைக்கிறது. பிற ரக மாம்பழத்தில், ஒரு காம்பில் ஐந்திற்கும் மேற்பட்ட பழங்களை காண முடியும்.
துவக்கத்தில் மகசூல் குறைவாக இருந்தாலும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என, செடி கொடுத்த பண்ணையாளர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஜி.பிரபு,
94442 13413.