/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
100 நாளில் அறுவடையாகும் செம்புலி சம்பா ரக நெல்
/
100 நாளில் அறுவடையாகும் செம்புலி சம்பா ரக நெல்
PUBLISHED ON : ஆக 14, 2024

செம்புலி சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த, கூழங்கல்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்யும் விவசாயி வீ.நடராஜன் கூறியதாவது:
நான், 51 விதமான பாரம்பரிய ரக நெல்லை சாகுபடி செய்து, பாதுகாத்து வருகிறேன். அந்த வரிசையில், செம்புலி சம்பா ரக நெல்லும் ஒன்றாகும். இந்த ரக நெல், 140 நாளில் அறுவடை செய்யலாம்.
பொதுவாக, பாரம்பரிய ரக நெல் சாகுபடியை பொருத்தவரையில், இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப, இலை, தழைகளை போட்டு மண் வளத்தை மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் பெற முடியும்.ஒரு ஏக்கருக்கு, 20 மூட்டைகள் வரையில் மகசூல் ஈட்டலாம். இந்த செம்புலி சம்பா ரக நெல் சிவப்பு நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதில், அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்து இருப்பதால், செம்புலி சம்பாவிற்கு வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: வீ. நடராஜன்,
99419 23626