/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக வருவாய்க்கு கிர்ணி பழ சாகுபடி
/
அதிக வருவாய்க்கு கிர்ணி பழ சாகுபடி
PUBLISHED ON : பிப் 26, 2025

கிர்ணி பழ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.தினேஷ்குமார் கூறியதாவது:
சவுடு கலந்த களிமண் நிலத்தில், கிர்ணி பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, 60 நாட்கள் வரை விளைச்சல் தரக்கூடிய பழம். குறிப்பாக, மாசி அமாவாசைக்கு பின் விதைக்கலாம். சித்திரை மாதத்தில் பழங்கள் அறுவடைக்கு வரும். கிர்ணி காய்கள் பச்சை நிறத்திலும், பழங்களாக மாறும் போது மஞ்சள் நிறத்திற்கு மாறும் தன்மை உடையவை.
ஒரு ஏக்கர் பரப்பில் கிர்ணி பழம் சாகுபடி செய்தால், 10 டன் வரையில் மகசூல் எடுக்கலாம். 1 கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்தால், 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். ஆண்டிற்கு ஒருமுறைசாகுபடி செய்தால், கணிசமான வருவாய் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எஸ்.தினேஷ்குமார்,99440 60924