/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
உயர்வுக்கு வழிகாட்டும் 'உழவர் உற்பத்தி மன்றம்'
/
உயர்வுக்கு வழிகாட்டும் 'உழவர் உற்பத்தி மன்றம்'
PUBLISHED ON : ஆக 22, 2018

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செயல்படும் 'உழவர் உற்பத்தி மன்றம்' விவசாயிகளின் உயர்வுக்கு வழிகாட்டுகிறது. 150 விவசாயிகளுடன் இம்மன்றம் கடந்த 2016ல் துவக்கப்பட்டது. விவசாய உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் பெற்று கொடுத்து வருகின்றனர்.
நபார்டு வங்கி உதவியோடு விவசாயிகளுக்கு பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்குதல், ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையம் துவக்குவது, உழவர்களை ஒருங்கிணைத்து பல உதவிகள் செய்தல், விதை, இடுபொருட்கள், உரம், பூச்சி விரட்டிகளை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்குதல், எப்பயிரானாலும் அதற்கு சிறப்பு ஆலோசனை வழங்குதல், புதிய விவசாய தொழில்நுட்ப பயிற்சி அளித்தல், அரசு நிதியுதவியுடன் உழவர் உற்பத்தி மன்றத்தை தொடர்ந்து நடத்திடல், விதை, விவசாய இடுபொருள், இயற்கை உர உற்பத்தியாளர்களுக்கு உதவி செய்து, விற்று கொடுத்தல், விவசாயிகளை ஒருங்கிணைத்து அந்தந்த பகுதிகளில் உழவர் உற்பத்தி மன்றம் துவக்குதல் உள்ளிட்ட பணிகளை மன்றம் செய்கிறது.
தொடர்புக்கு 99945 63039.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர் சென்னை.

