sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வனவியல் நாற்றங்கால் தொழில்நுட்பம்

/

வனவியல் நாற்றங்கால் தொழில்நுட்பம்

வனவியல் நாற்றங்கால் தொழில்நுட்பம்

வனவியல் நாற்றங்கால் தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஏப் 13, 2011

Google News

PUBLISHED ON : ஏப் 13, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாற்றங்கால் தொழில்நுட்பம்: 0.25 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதியில் 1.25 லட்சம் நாற்றுகள் வளர்ப்பது லாபகரமாக கருதப் படுகின்றது. கடன் வாங்குபவரின் பிரிவு, கொள்திறன் மற்றும் நாற்றங்காலின் தேவைக்கேற்ப நாற்றங்கால் பரப்பளவு அதிகரிக்கப்படும். சரியான வடிகால் வசதிக்காக நாற்றங்கால்கள், சீரான சரிவு நிலங்களில் அமைக்க வேண்டும். களை எடுத்தல் மற்றும் உழுதல் மூலம் நிலம் தயார் செய்யப்படும். முதலில் நாற்றங்கால்கள் படுக்கைகளில் வளர்த்து பின்னர் தொட்டிகளில் வளர்க்கப்படும். நாற்றங்காலிற்கு நிரந்தர நீர் ஆதாரம் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்பநிலை மற்றும் செலவை குறைக்க இது உதவும். 100ட் து 25ட் அளவு கொண்டு செவ்வக வடிவில் அமைக்க வேண்டும்.

10மீ து 10மீ (10 ச.மீ) அளவு கொண்ட பத்து விதைப்புப் படுக்கைகளை அமைக்க வேண்டும். இந்நிலையில், 1:12 விகிதத்தில் படுக்கைகள் தேவைப்படும். அதாவது ஒவ்வொரு படுக்கைக்கும் முறையாக 12 படுக்கைகள் தேவைப்படும். 120 படுக்கைகளில்இருந்து 1.25 லட்சம் நாற்றுகளை வளர்த்து, அவற்றிலுள்ள 1.20 லட்சம் நாற்றுகளை நெகிழி உரைகளில் மீதமிருக்கும் 5000 நாற்றுகள் வேர் நாற்றுகளாக வளர்க்கப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்கு நாற்றங்காலிலுள்ள நாற்றுகளுக்கு குறைவான அளவு நீர் அளித்தல் மற்றும் அவைகள் சூரிய வெளிச்சத்திற்கு பல்வேறு நேரத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலம் நாற்றுகளை கடினப் படுத்துதல்; இவ்வாறு செய்கையில் நாற்றுகளை வயலில் நடவு செய்தபின், பாதகமான சூழ்நிலைகளையும் அவை தாங்கி வளர உதவிசெய்யும். நாற்றங்கால்கள் தற்காலிகமானவைகள் மற்றும் அவை ஐந்து வருடங்கள் வரை இருக்கும். கோடைகால மாதங்களில் நெகிழி விரிப்புகள் அல்லது நிழல் வலைகள் கொண்டு நிழல் வழங்கப்படும். மூங்கில் பாய்களைக் கொண்டு நிழல் வழங்கப்படும். கம்பியைக் கொண்டு பகுதி முழுவதும் சுவர்போல் அமைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.

நீர்வளம் உள்ள பகுதிகளில் நவீன நாற்றங்கால்கள் அமைத்து தரமான நாற்றுகள் அளிப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நிரந்தரமாக அழிந்துவரும் வனவளங்கள் மற்றும் அதிகரித்து வரும் காடு அழித்தல்கள் போன்றவைகளை முன்னிறுத்தி, சமுதாய மக்களையும் சறுசுறுப்பாக காடு வளர்ப்பு திட்டங்களில் பங்குபெற வைத்தால்தான் இத்திட்டங்கள் வெற்றிபெறும். கிராம சமூகம் நேரடியாக பயன்பெறும் வரை சிறிய ஊக்குவிப்பு பணம் அவர்களுக்கு வழங்கப்படுவது நன்றாக அறிந்த விஷயமாகும். கிராமப்புறங்களில் நாற்றங்கால்கள் அமைப்பதற்கு கடனுதவி செலவுகள் மூலம் எளிய மற்றும் சரியான நேரத்தில் நாற்றுகள் கிடைக்குமாறு செய்வதன் மூலம் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம். சமுதாய மக்களை வன நாற்றங்கால்கள் அமைப்பதற்கு ஈடுபடுத்துவது, எதிர்காலத்தில் வன மறுமலர்ச்சி திட்டங்களில் முக்கிய அம்சமாக இருக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள நாற்றங்கால்கள் அமைக்கும் நிதியுதவி முறை பெரிய அளவில் வனம் வளர்ப்பதற்கு பேருதவியாக இருக்கும். தொடர்புக்கு: எம்.அகமது கபீர், 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம், திருப்பூர்-638 656.
-எம்.அகமது கபீர், 93607 48542.






      Dinamalar
      Follow us