sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஏப் 13, 2011

Google News

PUBLISHED ON : ஏப் 13, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணில் கரிமப்பொருள் சேமித்தல் என்பது காற்றிலுள்ள கரியமில வாயுவைப் பயிர்கள் மூலம் ஈர்த்து மண்ணில் கரிமப் பொருளாக சேமித்து வைத்தல்ஆகும். பயிரின் வேர்கள் மூலமாக இத்தகைய கரிமப் பொருட்கள் நேரடியாக நிலத்தில் இடப் படுகின்றன. இயற்கை உரங்கள், தொழுஉரம், கால்நடை, கோழிக் கழிவுகள், பண்ணைக் கழிவுகளை நிலத்தில் இடும்பொழுது இவைகள் சிதைந்து மக்குகின்றன. பின் இவை தாதுக்களுடன் இணைந்து ஒருவித கூட்டுப் பொருளாக மாறும். இவை நுண் துகள்களாக எளிதில் சிதை வடையாது. இத்தகைய நுண் துகள்கள் கரிமத் துகள்களைச் சுற்றி ஒட்டிக்கொண்டு மூடிவிடுவதால் நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு உட்படுவதில்லை. எனவே கரிமப் பொருட்கள் மண்ணின் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் கரிமம் வாயுக்களாக வெளியேறுவது தடுக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது.

மண், பயிர் வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில் கரிமவளத்தை மேம்படுத்தலாம்.

* உழவியல் முறைகள்: பாதுகாப்பான வரையறுக்கப் பட்ட உழவு முறைகளைக் கையாளுவதன்மூலம் மண்ணின் கரிமப்பொருள் வீணாவதைத் தடுக்க முடியும். இதன்மூலம் எக்டருக்கு ஆண்டுதோறும் 2-3 டன்கள் வரை மண்ணில் கரிமப் பொருளை ஈர்த்து சேமிக்க இயலும். உழவு?இல்லாத வேளாண்மை மூலம் கரியமிலவாயு அதிகமாக வெளியேறுவதைத் தடுக்கவும் குறைக்கவும் முடியும்.

* மூடுபயிர்: மூலமாக மண்ணில் அதிக அளவு கரிமப்பொருளை ஈர்த்து சேமிக்க இயலும். பயறுவகைப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் மண்வாழ் பல் உயிர்களைப் பெருக்கியும் பயிர்க்கழிவுகளை நிலத்திலிட்டும் கரிமச்சத்தினைச் சேமிக்கலாம்.

* பயிர்சுழற்சி: சரியான பயிர் சுழற்சியின் மூலம் மண்ணில் கரிம வளத்தை மேம்படுத்துவதோடு நுண்ணுயிர்களின் செயல் பாட்டினையும் மேம்படுத்தலாம்.

* உர மேலாண்மை: பயிர்களுக்குத் தேவையான உரங்களை முறையாகப் பயன்படுத்தும்போது மண்ணின் கரிமவளத்தைப் பாதுகாக்க முடியும். குறிப்பாக ஒருங்கிணைந்த உர மேலாண்மை மிக முக்கியமாகும்.?இயற்கை உரங்கள், கால்நடைக் கோழிக் கழிவுகள், பயிர்க்கழிவுகள், பசுந்தாள் உரங்கள், கம்போஸ்ட், தொழு உரங்களைத் தகுந்த அளவில் முறையாகப் பயன்படுத்தி மண்ணில் கரிமச் சத்தினை அதிகரிக்கலாம்.

* நீர் மேலாண்மை: முறையான நீர் மேலாண்மை மூலம் வறட்சிப் பகுதிகளிலும் மானாவாரி நிலங்களிலும் அங்கக உயிர்ப்பொருளை அதிகரிக்கச் செய்தும் வேர்கள் நன்கு வளர்ந்து மண்ணில் கரிமப் பொருட்களை மேம்படுத்தும்.

* தரம் குறைந்த நிலங்களை மேம்படுத்துவதன் மூலம் மண்ணின் கரிமப் பொருட்களின் அளவை கணிசமாக அதிகரிக்கலாம். இதன்மூலம் 600-1000 கிலோ கரிமச்சத்தை ஒரு எக்டரில், ஒரு ஆண்டில் மண்ணில் சேமிக்க முடியும்.

* காடு வளர்ப்பு: தரிசு நிலங்களிலும், தரம் குறைந்த நிலங்களிலும் காடு வளர்ப்பதன் மூலம் வாயு மண்டல கரியமில வாயுவை ஈர்த்து மண்ணில் கரிமப் பொருளாக சேமிக்க முடியும். இதன்மூலம் ஆண்டுதோறும் எக்டருக்கு 800-1000 கிலோ கரிமப்பொருட்களைச் சேர்க்கலாம். (தகவல்: முனைவர் ச.மகிமைராசா, சா.செண்பகவள்ளி, சுற்றுச்சூழல் அறிவியல் துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 041. 96555 70664)

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us