sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

இயற்கை விவசாயம் ஒரு விவசாயியின் அனுபவம்

/

இயற்கை விவசாயம் ஒரு விவசாயியின் அனுபவம்

இயற்கை விவசாயம் ஒரு விவசாயியின் அனுபவம்

இயற்கை விவசாயம் ஒரு விவசாயியின் அனுபவம்


PUBLISHED ON : ஏப் 06, 2011

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம் அருகே கொம்புபள்ளம் என்ற கிராமம் உள்ளது. இயற்கை சூழ்ந்த இனிய பிரதேசம்; எங்கும் சுத்தமான பிராணவாயு; இங்கு உள்ள ஐயர்தோட்டம் மிகவும் பிரபலமானதாகும். ஆரோக்கி யத்திற்கான எல்லா காரணிகளையும் இந்தத் தோட்டத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.சுந்தரராமன் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

மொத்தம் உள்ள 14 ஏக்கர் நிலத்தில் 13 ஏக்கரில் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. விஞ்ஞான முறையிலான நவீன வேளாண் செய்முறையை பின்பற்றாமல், இயற்கையிடம் இவர் இணைந்துள்ளார். ரசாயன இடுபொருட்களை இட்டு தீமை தரும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்பதும், எந்தச் சூழலிலும் உயிர் பறிக்கும் விஷங்களை உண்ணும் உணவை விளைவிக்கப் பயன்படுத்தவே கூடாது என்பதும் இவரின் உயரிய கோட்பாடு ஆகும்.

தாவரக்கழிவுகளை நிலத்திலேயே போட்டு எரிப்பது மிகப்பெரிய தவறு என்று இந்த வேளாண்கலைஞர் கூறுகிறார். இத்தகைய கழிவுகளை அப்படியே மண்ணில் போட்டுவிட்டால் அவை மக்கி, மண்ணிற்கு உரம் தரும். மண்ணில் மக்கிப் போன பொருட்கள் சேரும்போதுதான், ஆர்கானிக் கார்பனின் பவுதீக மற்றும் ரசாயனத் தன்மை பல்கிப் பெருகி மண் மிருதுவாகும். தாவரங்களின் வேர்கள் எளிதில் மண்ணில் ஊடுருவிச் சென்று, ஊட்டச் சத்துக் களை எடுத்துக்கொள்ள ஏதுவாகும். இதனால், விவசாயத்தைப் பூமி மண்ணே கவனித்துக்கொள்கிறது. இதன்மூலம் செலவும் குறைகிறது. எனவே, குறைந்த அளவில் நீர்ப்பாசனம் போதுமானது. தாவரங்களின் இலைகள் பெரிதாக வளரும். இதன் காரணமாக போதுமான ஒளிச் சேர்க்கையின் மூலமும் சத்துக்களைத் தாவரங்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் மகசூல் அதிகரிக்கிறது'' - இவ்வாறு கூறுகிறார் சுந்தரராமன்.

மேலும் (செலவு இல்லாத முறைகளைப் பரப்பிவரும் தபோல்கரின் தத்துவப்படி) பசு, எருமை, ஆடு போன்றவற்றை வளர்த்தல், அவை தரும் கோமியம், சாணம், புழுக்கை போன்றவற்றை விவசாய இடுபொருட்களாகத் தயாரிக்கப் பயன் படுத்துதல், பல்வேறு விதமான பயிர்களை வளர்த்தல், பண்ணைக் கழிவு, மண்புழு உரம் போன்ற வற்றை இயற்கை சார்ந்த வேளாண் முறைகள் இவர் பின்பற்றும் வழி களாகும். இவரைப் போன்ற வல்லுனர்களின் வழிகாட்டுதல் நாட்டின் விவசாய முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது.

எஸ்.நாகரத்தினம்,
56, லட்சுமி காலனி,
கச்சேரி ரோடு,விருதுநகர்-626 001.






      Dinamalar
      Follow us