PUBLISHED ON : மே 14, 2025

கேம்பல் ரக வாத்து வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர்மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
விவசாயத்திற்குஅடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில்பிரதானமாக உள்ளது.இதில், கேம்பல், இந்தியன் ரன்னர் ரக வாத்து வளர்ப்பு பிரதானமாக உள்ளது.
கேம்பல் ரக வாத்துகள்குளிர், கோடை, மழைஆகிய மூன்று பருவ காலங்களிலும் சிதோஷ்ண நிலையை தாங்கி வளரக் கூடிய இனமாகும்.
இந்த ரக வாத்துகளில் ஆண், பெண் என, இரு விதங்கள் உள்ளன.ஆண் ரக வாத்துகள் இறைச்சிக்கும். பெண் ரக வாத்துகள் முட்டை வருவாய்க்கு பயன்படுத்தப்படுகின்றன.
இறைச்சி மற்றும் முட்டை வருவாய்க்கு வாத்துகள் வளர்ப்பதால், இரு விதங்களில் வருவாய் ஈட்டலாம்.
குறிப்பாக, கேம்பல்ரக வாத்து வளர்ப்பில் ஒரு மாத இடைவெளியில் வாத்து குஞ்சுகளைப் பிடித்து வளர்த்து விற்பனை செய்யும் போது, அடுத்த டுத்த வருவாய்க்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
97907 53594.