PUBLISHED ON : பிப் 08, 2012
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக விவசாயிகளுக்காக, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு இரண்டாவது பசுமைப் புரட்சிக்காக விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, குறைந்த நீரில் அதிக பரப்பளவு சாகுபடி செய்ய, பாசனப் பகுதியை இரட்டிப்பாக்க, கிடைக்கின்ற நீரைக் கொண்டு ஒவ்வொரு துளி நீரிலும் உணவு உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு சுமார் 5000 எக்டேர் விவசாயிகளுக்காக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ரெயின்கன் அமைக்க 2000 எக்டேருக்கும், மொபைல் ஸ்பிரிங்ளர் (நுண் தெளிப்புபாசனம்) 2500 எக்டேரும் உள்ள மற்றும் நீர்வள, நிலவள திட்டத்தில் சுமார் 5000 எக்டேருக்கும் மேல் அமைக்கப் பட வேண்டிய பகுதி உள்ளது.
எனவே, இது நாள் வரை தமிழக விவசாயிகளுக்கு, இதுவரை கிடைத்திராத அனைத்து விதமான தெளிப்புநீர் பாசன முறைகளுக்கும் 1. மைக்ரோ ஸ்பிரிங்க்ளர், 2. மினி ஸ்பிரிங்க்ளர், 3. போர்டபிள் ஸ்பிரிங்க்ளர், 4. ரெயின்கன், 5. செமி மற்றும் பெர்மனன்ட் ஸ்பிரிங்க்ளர் போன்ற விவசாயிகளின் தேவையை அறிந்து தேவையான விவசாயிகளுக்கு தேவையான தெளிப்புநீர் பாசன கருவிகளை 100 சதவீத மானியத்தில் வழங்க உள்ளது. தேவையுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலகத்தையோ, தோட்டக் கலை அலுவலகத்தையோ, வேளாண்மை பொறியியல் அலுவலகத்தையோ தொடர்புகொண்டு பயன்பெற கேட்டுக் கொள்கிறோம். விரிவான விவரங்களுக்கும் தேவையான ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: எம்.பெரியசாமி, 97870 50505.

