/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் விவசாய உற்பத்தியை பாதிக்குமா
/
காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் விவசாய உற்பத்தியை பாதிக்குமா
காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் விவசாய உற்பத்தியை பாதிக்குமா
காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் விவசாய உற்பத்தியை பாதிக்குமா
PUBLISHED ON : பிப் 15, 2012

சமீபகாலத்தில் தர்மபுரி அருகிலுள்ள சோகத்தூர் பகுதியில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். இதில் வைரஸ் நோய் வந்ததால் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் விவசாயிகள் இந்த வருடம் பூமியில் இருக்கும் சொற்ப ஈரத்தை நம்பி கொண்டைக்கடலையை சாகுபடி செய்துள்ளனர். இதற்கு துணிவு ஏற்பட்டதற்குக் காரணம் யாதெனில் இப்பயிர் பூமியில் இருக்கும் ஈரத்தையும், பெய்யும் பனியின் உதவியாலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும் என்பதே. மேலும் இப்பயிர் பல சிறப்பியல்புகளை பெற்றுள்ளது.
குறைந்த செலவில் அதிக லாபத்தைத் தருகின்றது. வியாபாரிகள் சோகத்தூர் கடலையைத் தேடிப்பிடித்து நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.
அரை கிலோ அளவு பச்சைக்கடலையை ஊறவைத்து மாடு, எருமைகளுக்கு கொடுத்தால் கர்ப்பப்பை வளர்ச்சி மூலம் கால்நடைகள் சினைப்பருவத்திற்கு விரைவாக வருகின்றன.
விவசாயி ஸ்ரீதரன் (வாணியர் தெரு, சோகத்தூர் அஞ்சல், தர்மபுரி) இரண்டு ஏக்கரில் கொண்டைக்கடலை சாகுபடி செய்துள்ளார். இப்பயிர் 90 நாட்கள் வயதினைக் கொண்டது. பூமியை டிராக்டர் கொண்டு மூன்று சால் உழவு செய்யப்படுகிறது. உழும் சமயம் ஒரு மூடை காம்ப்ளக்ஸ் உரம் இடப்படுகின்றது. வேலை ஆட்கள் வைத்து கடலை விதை பூமியில் விதைக்கப்படுகின்றது. விதையை விதைக்கும் முன் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைக்கப்படுகிறது. செடி வளர்ந்தவுடன் 10 பெண் ஆட்களை வைத்து சுத்தமாக களை எடுக்கப் படுகிறது. பூமியில் இருக்கும் ஈரம் கொண்டைக்கடலைக்கு போதுமானதாக இல்லாவிட்டாலும் அந்த அளவு ஈரம் களைச்செடிகளுக்கு தேவையான அளவாக இருந்து செடிகள் அடர்த்தியாக வளர்ந்து விவசாயிக்கு களை எடுக்க அதிக ஆட்களை வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. செடி மேல் பனி ஈரம் இருக்கும் போது பயிர் பாதுகாப்பிற்காக பவுடர் மருந்து தூவப்படுகின்றது. பலன் கிட்டவில்லையெனில் எண்டோசல்பான் தெளிக்கப் படுகின்றது. ஒரு ஏக்கர் கொண்டைக்கடலை சாகுபடி செய்ய ரூ.10,320 செலவாகின்றது. விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ.பை
டிராக்டர் செலவு (உழவு) 2,000.00
விதை கடலை 30 கிலோ 3,000.00
காம்ப்ளக்ஸ் ஒரு மூடை 720.00
விதைக்க செலவு 200.00
களை எடுக்க 1,200.00
பயிர் பாதுகாப்பு 1,400.00
அறுவடை 1,200.00
காய் அடித்து
கடலை எடுக்க 600.00
மொத்தம் 10,320.00
மேற்படி சாகுபடி செலவு முந்தைய வருடங்களைவிட இரண்டு மடங்காகும். விவசாயி தனது பயிர் அறுவடைக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். தனது பயிரில் நான்கு மூடைவரை மகசூல் கிடைக்குமென்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார். இந்த நான்கு மூடை கொண்டைக்கடலையை விற்பனை செய்தால் சுமார் ரூ.24,000 வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். சாகுபடி செலவு ரூ.10,320 போக லாபம் ரூ.13,680 கிடைக்க வேண்டும். தற்போது கொண்டைக்கடலை பயிர் மட்டும் சோகத்தூர் பகுதியில் இங்கும் அங்கும் காணப்படுகிறது. விவசாயிகளுக்கு சாகுபடியில் லாபம் கிட்டும் போதுதான் வாய் திறந்து ஏதாவது பேசமுடியும். இருப்பினும் சூழ் நிலையைக்கண்டு பயப்படாமல் விவசாயி சாகுபடி செய்வது அவரது விடாமுயற்சியைக் காட்டுகின்றது.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

