தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விதை பரிசோதனையே விளைச்சலுக்கு ஆதாரம்

விதை பரிசோதனையே விளைச்சலுக்கு ஆதாரம்

விதை பரிசோதனையே விளைச்சலுக்கு ஆதாரம்


PUBLISHED ON : ஆக 14, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விதைப்பரிசோதனை என்பது புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன், பிற ரக கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதே.

விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விதைப் பரிசோதனை நிலையங்கள் செயல் படுகின்றன.

விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் தங்களிடம் உள்ள விதைகளின் தரம் பற்றி அறிந்து கொள்ள ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்த வேண்டும். விதை மாதிரி பெற்ற 30 நாட்களுக்குள் விதையின் தரம் குறித்த அறிக்கையை பெறலாம்.

குறைந்த தரம் உள்ள விதைகளை நிராகரிக்க விதைப் பரிசோதனை முடிவுகள் உதவுகின்றன. நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளை பயன்படுத்துவதன் மூலம் விதைச்செலவை குறைக்கலாம்.

புறத்துாய்மை பரிசோதனையில் பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் துாசு கண்றியப்படுகிறது. ஈரப் பதப் பரிசோதனையின் மூலம் பூச்சி நோய் தாக்குதலின்றி விதைகளை சேமித்து அடுத்த கால விதைப்பு வரை விதைகளை பாதுகாக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us