sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்னச்சின்ன செய்திகள்

/

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : பிப் 20, 2013

Google News

PUBLISHED ON : பிப் 20, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏலக்காய் நாற்றங்கால் பராமரிப்பு:



நாற்றங்காலில் தேவைக்கேற்ப சீரான இடைவெளியில் தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த 0.2 சத காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 0.2 சத மான்கோசெப் கரைசலை (100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம்) நாற்றங்காலில் மண் நனையும் படி ஊற்ற வேண்டும். டிரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாஸ் அல்லது பேசில்லசை உபயோகித்து உயிரி கட்டுப்பாட்டு முறையில் நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இலைஅழுகல் நோயைக் கட்டுப்படுத்த 0.3 சத மான்கோசெப் கரைசலை (100 லிட்டர் தண்ணீரில் 300 கிராம்) தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயின் ஆரம்ப அறிகுறி காணப்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த 0.25 சத டைபோலாடான் (100 லிட்டர் தண்ணீரில் 250 கிராம்) அல்லது 0.2 சத பெவிஸ்டினை (100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம்) தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்: தட்டையில் பச்சையாக உள்ள இலை உறையை அகற்றாமல் காய்ந்த இலைகளை மட்டும் கவாத்து செய்ய வேண்டும். குயினால்பாஸ் பூச்சிக்கொல்லியை (100 லிட்டர் தண்ணீரில் 200 மிலி) அல்லது புளூபென்டாமைடு பூச்சிக்கொல்லியை 100 லிட்டர் தண்ணீரில் 150 மிலி என்ற அளவில் கலந்து தண்டு துளைப்பானின் அந்துப்பூச்சி வெளிவரும் சமயத்தில் தெளிக்க வேண்டும்.

நோய் நிர்வாகம்: ஏலத்தோட்டத்தை அடிக்கடி கண்காணித்து கட்டே நச்சுயிரி நோய் தாக்குதல் உள்ள செடிகள் காணப்பட்டால் அவற்றை உடனுக்குடன் அகற்றி அழித்துவிட வேண்டும். இலைப்புள்ளி, இலைத்துரு மற்றும் செந்தாள் நோய்களைக் கட்டுப்படுத்த 0.25 சத மான்கோசெப் அல்லது கம்பேனியன் (100 லிட்டர் தண்ணீரில் 250 கிராம்) தெளிக்க வேண்டும். 30 நாட்கள் இடைவெளியில் 2-3 தடவை தெளிக்க வேண்டும்.

தட்டை ஒடிதல் காணப்பட்டால் 0.2 சத பெவிஸ்டினை தட்டையின்மேல் தெளிக்க வேண்டும். இலை மஞ்சளாகுதல் மற்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 0.2சத பெவிஸ்டின் அல்லது பெவிஸ்டின் - மான்கோசெப் 1 சத கரைசலை இலையின் மேல் தெளித்தும் மற்றும் செடியின் தூர்ப்பகுதியில் மண் நனையும்படியும் ஊற்ற வேண்டும். ஏலக்காயில் பழுப்பு நிற புள்ளிகள் தென்பட்டால் 0.2 சத பெவிஸ்டினைத் தெளிக்க வேண்டும்.

மஞ்சள்:



தாமதமாக நட்ட தோட்டங்களில் தற்சமயம் மஞ்சளை அறுவடை செய்யலாம். முன்னமே அடையாளமிட்ட செடிகளை தனியாக அறுவடை செய்து பின்னர் அவற்றை விதை மஞ்சளுக்காக உபயோகப் படுத்தலாம். மற்ற செடிகளையும் முதிர்ச்சியின் அறிகுறிகளைப் பொறுத்து அறுவடை செய்யலாம். முன்னமே அறுவடை செய்த தோட்டங்களில் குழிகளில் சேமித்துவைத்துள்ள விதைக்கிழங்குகளை 20 நாட்களுக்கு ஒரு முறை கண்காணித்து வதங்கிய மற்றும் நோய் தாக்கிய கிழங்குகளை அகற்றிவிட வேண்டும்.

அறுவடை செய்த மஞ்சள் விரலி மற்றும் கிழங்கு (குண்டு) எனத் தனித்தனியாக பிரித்து பதப்படுத்த வேண்டும். சுத்தமான தண்ணீரில் வேகவைத்து சூரிய ஒளியில் உலர்த்துவதன்மூலம் பதப்படுத்தலாம். சுத்தமான உலர்களம் அல்லது தார்ப்பாய் மீது பரப்பி 10-15 நாட்கள் வரை உலரவைக்க வேண்டும்.

இஞ்சி:



குழிகளில் சேமித்து வைத்துள்ள விதைக்கிழங்குகளை 20 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து வதங்கிய மற்றும் நோய் தாக்கிய கிழங்குகளை அகற்றிவிட வேண்டும்.

வனிலா:



செடியின் தூர்ப்பாகத்தில் அங்ககப் பொருட்களைக் கொண்டு போதுமான அளவில் மூடாக்கு இடவேண்டும். வளர்ந்துவரும் வெனிலா செடியை தாங்கு மரத்தில் ஏற்றிவிட வேண்டும். பூக்கள் தோன்றும் தோட்டங்களில் பூக்கள் மலர்ந்த அன்றே காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கை கொண்டு மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டும். தோட்டத்தில் நச்சுயிரி நோய் (வைரஸ்) தாக்குதலின் அறிகுறிகள் உள்ளதா என்று கண்காணித்து அவ்வாறு காணப்பட்டால் அந்தக் கொடியை உடனடியாக அகற்றி அழித்துவிட வேண்டும்.

காய்கள் அறுவடையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். காய்களின் நுனிப்பகுதியில் வெளிறிய மஞ்சள் நிறம் காணப்படுவது காய்கள் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும். முதிர்ச்சி அடைந்த காய்களை அறுவடை செய்வதால் பதப்படுத்தும்போது தரத்தை உறுதி செய்ய முடியும். அறுவடை செய்த வெனிலா காய்களை பார்பன் முறையில் பதப்படுத்தலாம். அல்லது அறுவடை செய்தவுடன் விற்பனை செய்யலாம்.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us