sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சின்ன சின்ன செய்திகள்

/

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்


PUBLISHED ON : செப் 10, 2014

Google News

PUBLISHED ON : செப் 10, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கடலைப் பயிர் சாகுபடிக்கு நுண்தெளிப்பு நீர் மற்றும் உரப்பாசனம் : இறவை நிலக்கடலை விதையினை 30ஙீ10 செ.மீ. இடைவெளியில் மேட்டுப்பாத்திகளில் விதைக்க வேண்டும். நுண் தெளிப்பான் பாசனமுறை அமைப்பதற்கு பாதாள குழாய் மற்றும் துணைக்குழாய்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பக்கவாட்டு குழாயிலும் இரண்டு மீட்டர் இடைவெளியில் நுண்குழாய் மூலம் நுண் தெளிப்பான்களை இணைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசன இடைவெளி காலத்தில் உரப்பரிந்துரையில் எக்டருக்கு 34 கிலோ என்ற அளவில் யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை நான்கு சம பாகங்களாகப் பிரித்து விதைத்த 15,30,45,60 நாட்களில் நுண்தெளிப்பான் மூலம் அளிக்க வேண்டும். இவ் வகை நுண்தெளிப்பான் உரப்பாசனம் கடைப்பிடிப்பதால் நிலக்கடலை மகசூல் எக்டருக்கு 400 கிலோ வரை அதிகரிக்கிறது. பயிரின் நீர்த்தேவை 50-100 மி.மி வரை குறைகிறது.

டி.என்.ஏ.யு. பருத்தி பிளஸ் : பருத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்.

பயன்படுத்தும் முறை : ஏக்கருக்கு 2.5 கிலோ, தெளிப்பு திரவம் 200 லிட்டர், தெளிக்கும் பருவம் - பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் பருவம், தேவையான அளவு ஒட்டு திரவம் சேர்க்கலாம்.

பயன்கள் : பூவும், சப்பைகளும் உதிர்வது குறையும். காய்கள் முழுமையாக வெடித்து, சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும். வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும்.

செலவு : ரூ.300/- ஏக்கருக்கு (தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை)

நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கு நிலத்தடி சொட்டுநீர் உரப்பாசனம் : ஒரு விதைப்பரு சீவல்முறையில் நாற்றுக்கள் தயாரித்தல் மூலம் விதைக் கரனைகளின் தேவையை குறைக்கவும், அதிக முளைப்புத்திறன், சுலபமாக இடம் விட்டு இடம் எடுத்து செல்லுதல், பயிர்களில் ஆரோக்கியம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது பரு சீவல்களைக் கொண்டு நாற்றுக்கள் உருவாக்கும் முறையே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

வீரிய வளர்ச்சியுடைய இளம் நாற்றுக்களை (30-35 நாட்கள் வயதான) எடுத்து நடவு செய்தல், 6 அடி இடைவெளியில் பக்க குழாய்கள் அமைத்து இருபாருக்கும் 2 அடி இடைவெளியில் நாற்றுக்களை நடவு செய்தல், மண்ணின் நீர்ப்பிடிப்புத்தன்மையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் சொட்டுநீர் பாசனம் செய்திடல் வேண்டும்.

சிபாரிசு செய்யப்படும் மணிச்சத்து உரத்தினை அடியுரமாக இடவேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை சரியாகப் பிரித்து நடவு செய்த 15 முதல் 210 நாட்கள் வரை வாரம் ஒருமுறை யூரியா மற்றும் வெள்ளை பொட்டாஷ் வடிவில் சொட்டுநீர் வழி அளித்திட வேண்டும்.

இயற்கை உரம் அளித்தல் : நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது இயற்கை முறையில் உரம் அளித்தலை ஆதரிக்கிறது. இயற்கை உரங்களான தொழுஉரம், லேகிய உரம் மக்கிய பிரஸ்மட் ஆகியவற்றினை ஏக்கருக்கு 8-10 டன் அளவிற்கு அளிப்பது நல்லது. தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு 112 கிலோ கிடைக்கும். அளவிற்கு சரிபார்த்து மேற்கண்ட உரங்களை இடுவது சிறப்பு. இயற்கை உரங்களோடு டிரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு 1 கிலோ அளவில் கலந்து அளிப்பது இன்னும் சிறந்தது.

வேலையாட்களைக் கொண்டே கருவிகள் மூலமாகவோ நடவுக்குப்பின் 30,60 மற்றும் 90வது நாட்களில் களை எடுத்தல் மிகவும் அவசியம். மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணிலுள்ள களைகள் கட்டுப்படுவதுடன் மண்ணுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. கரும்பு சோகைகளை ஏக்கருக்கு 1.5 டன் அளவில் நடவுக்கு 3 நாட்களுக்குப் பின் பரப்பி விடுதல் நல்லது. அதேபோல் சோகை உரித்தால் அவைகளை பார் இடைவெளிகளில் பரப்பி வருவதும் சிறந்தது. முதல் முறையாக 45ம் நாளில் உரமிட்ட பின்பு மண் அணைத்து புதிதாக முளைக்கும் வேர்களுக்கு அணைப்பு கொடுக்க வேண்டும்.

கரும்புபயிர் ஒரு சாதாரண பயிரிலிருந்து ஒரு சமயத்தில் 30-35 சோகைகள் விடுகிறது. ஆனால் ஒளிச்சேர்க்கைக்கு மேற்புறமுள்ள 8-10 இலைகளை தேவைப்படும். எனவே கீழ்ப்புற முள் காய்ந்த மற்றும் சில காயாத இலைகளர் 5 மற்றும் 7வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் பரப்புவது சிறந்தது. (தகவல் : உழவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-1)

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us