தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : ஜன 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

மனீஷா-96 வீரிய ஒட்டு சோளம்: வயது 100 முதல் 105 நாட்கள். உயரம் 180 செ.மீ. வரை வளரக் கூடியது. சாயும் தன்மை அற்றது. வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. முத்துப்போன்ற வெண்ணிறமுள்ள பருமனான மணிகள், கால்நடை தீவனத்திற்கேற்ற தரமான முக்கிய தட்டைகள், பெரிய உறுதியான கதிர்கள், நெருக்கமான பெரிய மணிகள், மகசூல் ஏக்கருக்கு 32-35 குவின்டால். மேலும் விபரங்களுக்கு: மனீஷா அக்ரி பயோடெக் (பி) லிட்., ஐதராபாத்-500 029. 93441 07630.

பூம் பிளவர் அல்ட்ரா: தேவி கிராப் சயின்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் மூலம் கண்டறியப்பட்ட அதிநவீன, தனித்துவம் வாய்ந்த 22 சதம் அரோமேட்டிக் நைட்ரஜன் மூலப்பொருளைக் கொண்டது. இது உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நெல் பயிரில் பயன்படுத்தும்போது வலுவான வேர்கள், அதிக சிம்புகள், நீண்ட கதிர்கள், தரமான நெல்மணிகள், உயர்ந்த மகசூல் பெற சிபாரிசு செய்யப்படுகிறது. தொடர்புக்கு: ''தேவி கிராப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட், மண்டல அலுவலகம், N.193, வணிக வளாகம், மாட்டுத்தாவணி, மதுரை-625 007. போன்: 0452-258 2211.''

உயிர் உரங்கள் இடுவதன் மூலம் - தழைச்சத்து நிலைப்படுத்தப்படுகிறது. மணிச்சத்து, சாம்பல்சத்து கரைத்து தரப்படுகிறது. சிலிகேட் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன. பயிரின் வளர்ச்சியும் வேரின் வளர்ச்சியும் கூடுகிறது. வளர்ச்சி ஊக்கிகள் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. ரசாயன உர உபயோகம் குறைந்து சுற்றுச்சூழல் மேம்படுகிறது. மகசூல் கூடுகிறது மற்றும் மண்வளம் காக்கப்படுகிறது.

பயறுவகைகள் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண்மை உத்திகள்: பாசன வசதியுள்ள பகுதிகளில் துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறுவகைகளை தனிப்பயிராக பயிரிடுதல். சரியான பட்டத்தில் காலத்திற்கேற்ற உயர் விளைச்சல் ரகத்தை தேர்வு செய்தல். செடிகளுக்கிடையே சரியான இடைவெளியைப் பராமரித்தல். ஒருங்கிணைந்த களை நிர்வாகம், உர நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாகம். 2 சத டி.ஏ.பி. உரத்தையும், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கியையும் பூக்கும் பருவத்திலும், 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை இலை வழியாக அளித்தல். நல்ல சேமிப்பு கிடங்குகளில் விதைகளைப் பராமரித்து முளைப்புத் திறன் மற்றும் பூச்சிகளின் தாக்குதலில்இருந்து பாதுகாத்தல். பயறுகள் ஊட்டச்சத்தினை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ அளவில் 250 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்கள் பூக்கும் காலத்தில் காலை நேரத்தில் இலைவழி தெளித்தல். உற்பத்தியாளர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ மேம்படுத்தப் பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பருப்பு உடைக்கும் கருவியை வாங்கி பயன்படுத்தி, துவரை, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை பருப்பாக உடைத்து சுத்தம் செய்து, தரம் பிரித்து அதிக வருமானத்தைப் பெறலாம். பாசன வசதியுள்ள இடங்களில் துவரையை நாற்றுவிட்டு உரவழி நீர்பாசனம் செய்வதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். பயறுவகைப் பயிர்களை வறட்சி ஏற்படுகின்றபோது மொபைல் ஸ்பிரிங்க்ளரைப் பயன்படுத்தி வறட்சியிலிருந்து பாதுகாத்து அதிக மகசூலைப் பெறலாம். (தகவல்: துணைவேந்தர், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003). -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us