/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெல்லிபோல இனிக்கும் இனிப்பு லுவிகா பழம்
/
நெல்லிபோல இனிக்கும் இனிப்பு லுவிகா பழம்
PUBLISHED ON : ஏப் 10, 2024

இனிப்பு லுவிகா பழ சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு விதமான பழ மரங்களை நட்டுள்ளோம். அந்த வரிசையில், இனிப்பு லுவிகா பழம் சாகுபடி செய்துள்ளோம்.
இந்த இனிப்பு லுவிகா பழம், ஏறக்குறைய நெல்லிக்காய் வடிவத்தில் இருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய செர்ரி வகை பழமாகும்.
விளை நிலம் மற்றும் மாடி தோட்டத்திலும், இனிப்பு லுவிகா பழம் சாகுபடி செய்யலாம். இது, 18 அடி உயரத்தில் காய்க்கக்கூடிய பழ ரகமாகும். இது, சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:பி.கிருஷ்ணன்,98419 86400.