/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விரால்களுக்கு தீவனமாக திலேப்பியா மீன் குஞ்சுகள்
/
விரால்களுக்கு தீவனமாக திலேப்பியா மீன் குஞ்சுகள்
PUBLISHED ON : ஜூன் 26, 2024

விரால் மீன் வளர்ப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, தண்டரை கிராமத்தைச் சேர்ந்த மீன் வளர்ப்பு விவசாயி இ.அரிஅழகன் கூறியதாவது:
என் நிலத்தில், 100 அடி நீளம். 45 அகலம் உடைய பண்ணை குட்டையில், விரால் மீன் வளர்த்து வருகிறேன்.
இது போன்ற குட்டைக்கு, 1,000 விரால் மீன் குஞ்சுகள் வளர்க்கலாம்.
குறிப்பாக, கெண்டை, கட்லா, ரோகு ஆகிய மீன் இனங்களுக்கு தீவனம் அளிக்க வேண்டும். அப்போது தான் ஆண்டிற்கு, இரு முறை மீன் அறுவடை செய்ய முடியும்.
குறிப்பாக, விரால் மீன் வளர்ப்பிற்கு தீவனம் அளிக்க வேண்டியதில்லை.
ஏரியில் வளரும் திலேப்பியா மீன்களை மீன் குட்டைகளில் வளர்த்தால் போதும். திலேப்பியா மீன் குஞ்சுகள் தான், விரால் மீன்களுக்கு தீவனமாக சாப்பிட்டு விட்டு வளரும்.
ஏழு மாதங்களில் விரால் மீன்கள் பிடித்து விற்பனை செய்யலாம்.
கூடுதல் எடைக்கு, 12 மாதங்கள் வரையில் விடலாம். அப்போது, விரால் மீன்களின் எடையும் கூடும். விவசாயிகளுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: இ.அரிஅழகன்,
80567 66585.