/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
எலுமிச்சையில் கேன்கர் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிக்கலாம்
/
எலுமிச்சையில் கேன்கர் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிக்கலாம்
எலுமிச்சையில் கேன்கர் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிக்கலாம்
எலுமிச்சையில் கேன்கர் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிக்கலாம்
PUBLISHED ON : ஜூலை 30, 2025

எலுமிச்சை பழத்தில் கேன்கர் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
கேன்கர் என்பது, ஒருவிதமான பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோய். எலுமிச்சை சாகுபடியில் இலைகள், கிளைகள் மற்றும் பழங்களில் இந்நோய் பாதிக்கும். முதலில், சிறிய நீர்த்துளி போல புள்ளிகள் தோன்றும். பின், பழுப்பு நிறமாக மாறி புள்ளிகள் தோன்றும். இலை உதிர்வு, கிளை உலர்வு, பழங்கள் உதிர்வில் கொண்டு போய் விடும். எலுமிச்சை சாகுபடியில் பெரிதளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும்.
இதை கட்டுப்படுத்துவதற்கு, நோய் தாக்கமில்லாத மரச்செடிகளை தேர்வு செய்து நடவேண்டும். நோய் பாதித்த இலை, கிளைகள், பழங்களை அகற்ற வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியுடைய ரகங்களை தேர்வு செய்து நட வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில், 2 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்து கலந்து, ஒருவார இடைவெளியில், எலுமிச்சை மரங்களுக்கு தெளிக்கலாம். இவ்வாறு செய்வன் மூலமாக, எலுமிச்சை பழத்தில் இழப்பு இன்றி மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -முனைவர் செ.சுதாஷா, 97910 15355.