/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக வருவாய்க்கு ஜமுனாபாரி ஆடுகள்
/
அதிக வருவாய்க்கு ஜமுனாபாரி ஆடுகள்
PUBLISHED ON : ஜூலை 30, 2025

ஜமுனாபாரி ரக ஆடு வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில்கள் பிரதானமாக உள்ளன. இதில், வெள்ளாடு வளர்ப்பில் நல்ல வருவாய் ஈட்டலாம்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த ஜமுனாபாரி, போயர் உள்ளிட்ட வெள்ளாடு வளர்ப்பில், கால்நடை விவசாயிகள் கணிசமான வருவாய் ஈட்டலாம். குறிப்பாக, ஜமுனாபாரி ரக ஆட்டின் காது நீளமாகவும், அழகான தோற்றத்துடனும் காணப்படும். இந்த ஆட்டின் இறைச்சி மிருதுவாகவும், அதிக சுவையுடனும் இருப்பதால், ஜமுனாபாரி ஆடுகளுக்கு கிராக்கி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அதிகமாக வளர்க்கப்படும் இந்த ஆடுகள், நம்மூர் தட்பவெட்ப நிலைகளையும் தாங்கி வளர்கின்றன. இரு ஆண்டுகளுக்கு மூன்று முறை குட்டி போடும். குட்டிகளாக விற்பனை செய்தால், ஒரு குறிப்பிட்ட வருவாயும், வளர்ந்த ஆடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்தால், அதிக வருவாயும் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -கே.பிரேமவல்லி, 97907 53594.