/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஆடி பருவத்திற்கு உகந்தது கள்ளிமடையான் ரக நெல்
/
ஆடி பருவத்திற்கு உகந்தது கள்ளிமடையான் ரக நெல்
PUBLISHED ON : ஜூலை 30, 2025

கள்ளிமடையான் ரக நெல் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், பாரம்பரியமான கள்ளிமடையான் ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். இதை, 150 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். ஆடி பருவத்தில் சாகுபடி செய்யக்கூடிய ரகங்களில் சிறப்பு ரகம்.
இந்த ரக நெல் மஞ்சள் நிறத்தில் குண்டாகவும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேலும், கதிர் நாவாய் பூச்சி, தண்டு துளைப்பான், குலை நோய் எதிர்ப்பு திறன் உடையது.
பாரம்பரிய ரக நெல்லை, ரசாயனம் இன்றி சாகுபடி செய்யும் போது, குறைந்த மகசூல்தான் கிடைக்கும். அதையே அரிசியாக மாற்றி, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -நீலபூ.கங்காதரன், 96551 56968.