/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மணல் கலந்த களிமண் நிலத்தில் உருளை வடிவ சப்போட்டா சாகுபடி
/
மணல் கலந்த களிமண் நிலத்தில் உருளை வடிவ சப்போட்டா சாகுபடி
மணல் கலந்த களிமண் நிலத்தில் உருளை வடிவ சப்போட்டா சாகுபடி
மணல் கலந்த களிமண் நிலத்தில் உருளை வடிவ சப்போட்டா சாகுபடி
PUBLISHED ON : ஜூலை 30, 2025

உ ருளை வடிவ சப்போட்டா சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசா யி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
அந்த வரிசையில், மணல் கலந்த களிமண் நிலத்தில், உருளை வடிவ சப்போட்டாவை வரப்புகளில் சாகுபடி செய்துள்ளேன். மணல் கலந்த களிமண்ணுக்கு, உருளை வடிவ சப்போட்டா மரச்செடி நன்றாக வருகிறது.
வரப்பில் நட்டிருந்தாலும் செடிகளுக்கு தனித்தனியாக உரமிட்டு வருகிறேன். சில விவசாயிகள், நெற்பயிருக்கு போடும் உரத்தையே பழச்செடிகளுக்கு உபயோகப்படுத்துவர். இதில், தனி கவனம் செலுத்தி, இயற்கை உரம் போட்டு சப்போட்டா பழ மரங்களை கண்காணிக்கும் போது, சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- பி.குகன்,
94444 74428.