ADDED : ஆக 16, 2026 11:06 PM
கொப்பால்: ஹோட்டல்களை தொடர்ந்து, பேயிங் கெஸ்ட் மையங்கள், விடுதிகளில் சோதனையிட ஜி.பி.ஏ., திட்டமிட்டுள்ளது. இன்று முதல் சோதனை துவங்கப்படுகிறது.
பெங்களூரின் சொகுசு ஹோட்டல்களின், சமையல் அறைகளில்,ஜி.பி.ஏ.,வின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன இறைச்சி, காய்கறிகள், பால் உட்பட, பல உணவு பொருட்களை கண்டுபிடித்தனர்.
இந்திரா உணவக சமையல் அறைகளிலும், சோதனை நடத்தப்பட்டது. இங்கு சமையல் அறைகளில் எலிகள் நடமாடின. இதை தீவிரமாக கருதிய ஜி. பி.ஏ., அதிகாரிகள், பெங்களூரில் உள்ள பி.ஜி.,க்கள், ஹோட்டல், தாபா, ரெஸ்டாரென்ட்களில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
முதற்கட்டமாக பெங்களூரு கிழக்கு மாநகராட்சி எல்லையில் மாணவர் விடுதிகள், பி.ஜி.,க்கள், தாபா உணவகங்களில் சோதனை நடத்த வேண்டும். குளறுபடிகள் இருப்பது தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநகராட்சி கமிஷனர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி இன்று முதல் சோதனை துவக்கப்படுகிறது.
