ADDED : ஆக 16, 2026 11:06 PM
உத்தரகன்னடா: உத்தரகன்னடா மாவட்டம், குமட்டா தாலுகாவின் கோகர்ணா அருகில் உள்ள ததடி அளிவே துறைமுகத்தில் இருந்து, நேற்று காலை படகு ஒன்று மீன் பிடிக்க கடலில் சென்று கொண்டிருந்தது.
மோகன் கிமானி என்பவருக்கு சொந்தமான, ஸ்ரீதேவி என்ற அந்த படகில், நான்கு மீனவர்கள் இருந்தனர்.
ஆழமான பகுதிக்கு சென்று, மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அலைகளின் ஆக்ரோஷத்தை தாங்காமல், படகு கவிழ்ந்தது. நான்கு மீனவர்கள் நீரில் விழுந்தனர்.
இதை பார்த்த, இதே பகுதியில் நாகராஜ ஹரிசந்திராவுக்கு சொந்தமான, இடகுஞ்சி விநாயகா என்ற படகில், மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், உடனடியாக உதவிக்கு வந்தனர். நீரில் தத்தளித்த நான்கு மீனவர்களையும் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர்.
நால்வரையும் கோகர்ணா ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து, கோகர்ணா போலீசார் விசாரிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய படகை மற்றொரு படகில் கட்டி, கரைக்கு இழுத்து வர முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதனால், 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
