/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்பூசணியில் செயற்கை வண்ணம் சேர்ப்பு?
/
தர்பூசணியில் செயற்கை வண்ணம் சேர்ப்பு?
ADDED : பிப் 28, 2025 11:01 PM

பெங்களூரு: கோடை காலம் துவங்கியதும், விற்பனை செய்யும் பழங்களில், செயற்கை நிறம் பூசப்பட்ட பழங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பல பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, தர்பூசணி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கோடை காலம் துவங்கி விட்டது. வழக்கம் போல், சாலை ஓரங்களில் அளவுக்கு அதிகமான திடீர் பழக்கடைகள் முளைக்க துவங்கி உள்ளன. இந்த காலகட்டத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை ஜோராக நடக்கும்.
ரசாயன வண்ணம்
விவசாயிகளிடம் இருந்து தர்பூசணிகள் வாங்கும் விற்பனையாளர்கள், இங்குள்ள விற்பனை மையங்களுக்கு விற்கின்றனர். இதில் சில விற்பனையாளர்கள், பழங்களுக்குள் ரசாயன வண்ணங்களை ஊசி மூலம் செலுத்துகின்றனர். இதனால் தர்பூசணியை பார்க்க அழகாகவும், அப்போது தான் அறுவடை செய்து வந்தது போன்று காட்டி விற்பனை செய்கின்றனர்.
இதை பார்த்து ஏமாறும் வாடிக்கையாளர்களுக்கு, ரசாயனம் ஊசி செலுத்தப்பட்ட பழங்களை தருவர். அதை ருசிக்கும் வாடிக்கையாளர்கள், அதையே வாங்கி செல்வர்.
இதை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ரெய்டு நடத்துவர். அதுபோன்று, நேற்றும் பெங்களூரு மட்டுமின்றி, மாநிலம் முழுதும் பல இடங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
சோதனை செய்யும் அதிகாரிகள், ஆய்வுக்காக அனுப்ப உள்ளனர். அறிக்கை கிடைத்த பின், செயற்கை வண்ணங்களை் ஊசி மூலம் செலுத்தியிருந்தால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
எப்படி கண்டுபிடிப்பது?
தர்பூசணியை சிறிய துண்டாக வெட்டி, தண்ணீரில் போடவும். தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறதா என பார்க்கவும். மாறினால் ரசாயனம் கலக்கப்பட்டது என்று அர்த்தம். 'டிஷ்யூ பேப்பரை' எடுத்து, பழத்தில் தடவும் போது, காகிதம் சிவப்பாக மாறினால் ரசாயனம் கலக்கப்பட்டதாகும்.
ரசாயனம் கலந்த தர்பூசணி சாப்பிடுவதால், வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படும். செறிமானத்தில் பிரச்னை ஏற்படும். உரிய நேரத்தில் பசி எடுக்காது; அத்துடன் சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் இரைப்பை பிரச்னைகள் ஏற்படலாம்.
சோர்வு, தாகம் ஏற்படும். சிறுநீரங்களிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இரண்டு நாட்களுக்கு முன் தான் ஹோட்டல்களில் இட்லியை வேகவைக்க பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துவதை கண்டறிந்த உணவு பாதுகாப்பு துறையினர், அவற்றுக்கு தடை விதித்து உள்ளனர்.