/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்லுாரி பணம் கையாடல் ஊழியர் மீது வழக்கு
/
கல்லுாரி பணம் கையாடல் ஊழியர் மீது வழக்கு
ADDED : மார் 09, 2025 11:35 PM
பெங்களூரு: கர்நாடக சித்ரகலா பரிஷத்தின், மாலை கல்லுாரியில் மாணவர்களின் கல்வி கட்டணம் 20 லட்சம் ரூபாயை, தன் கணக்கில் மாற்றி கொண்ட 'பி' குரூப் உதவியாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரில் உள்ள, கர்நாடக சித்ரகலா பரிஷத்தின், மாலை நேர கல்லுாரியில் ராகவேந்திர ஷெட்டி என்பவர், 'பி' குரூப் உதவியாளராக பணியாற்றுகிறார்.
இவர் மாணவர்கள் செலுத்திய, கல்வி கட்டணம் 20 லட்சம் ரூபாயை, தன் கணக்கில் மாற்றி கொண்டார். சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தினார்.
கணக்கு தணிக்கையின் போது, இவரது மோசடி தெரியவந்தது. இது குறித்து கல்லுாரி நிர்வாகம் விசாரித்த போது, 4 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி தொகையை தராமல் இழுத்தடித்தார். பல முறை கேட்டும் அலட்சியம் காண்பித்தார்.
இவர் மீது, ஹைகிரவுன்ட் போலீஸ் நிலையத்தில், கல்லுாரி நிர்வாகம் புகார் செய்தது. ராகவேந்திர ஷெட்டி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.