/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண் ஊழியரை திட்டிய மாநகராட்சி அதிகாரி மீது புகார்
/
பெண் ஊழியரை திட்டிய மாநகராட்சி அதிகாரி மீது புகார்
பெண் ஊழியரை திட்டிய மாநகராட்சி அதிகாரி மீது புகார்
பெண் ஊழியரை திட்டிய மாநகராட்சி அதிகாரி மீது புகார்
ADDED : மார் 02, 2025 06:27 AM
பெங்களூரு: விடுமுறை எடுத்துக் கொண்ட பெண் ஊழியரை, தகாத வார்த்தைகளால் திட்டிய உயர் அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், அவசியத்தின்பேரில், ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டார்.
நேற்று முன் தினம் பணிக்கு திரும்பினார். அவர் விடுமுறை எடுத்ததால், உதவி கமிஷனர் சீனிவாஸ் மூர்த்தி கோபம் அடைந்தார்.
பெண் ஊழியரை பார்த்து, ''எதற்காக விடுமுறை எடுத்தாய். தொழில் நடத்துகிறாயா? அதற்காக விடுமுறை எடுத்தாயா? உனக்கு ஹெச்.ஐ.வி., வந்துள்ளதா? உன்னை யாராவது பலாத்காரம் செய்து, துாக்கி எறிந்தார்களா? பாசிடிவ் உள்ளது என்பதால் டெஸ்ட் செய்து கொண்டாயா?' என வாய்க்கு வந்தபடி அநாகரீகமாக பேசி, திட்டியுள்ளார்.
மனம் வருந்திய பெண் ஊழியர், ''என்ன பேசுகிறீர்கள்? இப்படி பேசுவது சரியல்ல,'' என கண்டித்ததும், சீனிவாஸ் மூர்த்தி, ''நான் உன்னை சொல்லவில்லை,'' என, மழுப்பி உள்ளார்.
இவர் பெண் ஊழியரை திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
சீனிவாஸ் மூர்த்தியின் செயல் குறித்து, மாநகராட்சி சிறப்பு கமிஷனருக்கு பெண் ஊழியர் கடிதம் மூலம் புகார் அளித்தார்.
இதற்கு முன்பும் கூட, சீனிவாஸ் மூர்த்தி மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்தன. அப்போது அவரை ஊழியர் சங்கம் எச்சரித்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் வலியுறுத்துகிறார்.