தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா காங்., தேவேந்திரப்பா மிரட்டல்

 எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா காங்., தேவேந்திரப்பா மிரட்டல்

 எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா காங்., தேவேந்திரப்பா மிரட்டல்


ADDED : செப் 02, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: ''ஜகளூரை, வறட்சி பாதித்த தாலுகாவாக அறிவிக்காவிட்டால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன்,'' என, காங்கிரசின் தேவேந்திரப்பா மிரட்டல் விடுத்துள்ளார்.

தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:

வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் முதல் கட்ட பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஜகளூர் தாலுகாவின் பெயர் இல்லை. என் தாலுகா மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நான் எம்.எல்.ஏ.,வாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

இரண்டாவது பட்டியலில் ஜகளூர் பெயர் இல்லாவிட்டால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன். துணிச்சலான முடிவு எடுக்க தயாராக உள்ளேன்.

முதல்கட்ட பட்டியலில் ஜகளூர் பெயர் இடம் பெறாமல் போனதற்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மல்லிகார்ஜுன், கலெக்டரின் அலட்சியம் தான் காரணம்.

எனது தொகுதியை, கல்யாண கர்நாடகா மண்டலத்தில் இணைத்தால் மட்டுமே வளர்ச்சி பணிகள் நடப்பது சாத்தியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us