/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
/
ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
ADDED : மார் 10, 2025 09:40 PM

பெங்களூரு: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, எனக்கு எந்த கடிதமும் வரவில்லை,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
'பான் இந்தியா' நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், கர்நாடகாவின் குடகு, விராஜ்பேட்டையை சேர்ந்தவர்.
“பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்படி ராஷ்மிகாவுக்கு அழைப்பு விடுத்தோம். அவர் வர மறுத்துவிட்டார்,” என, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா குற்றஞ்சாட்டியிருந்தார்.
“ராஷ்மிகா போன்றவர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்,” என்றும் கூறி இருந்தார்.
ரவிகுமார் கனிகாவின் கருத்தால், ராஷ்மிகா சார்ந்த கொடவா சமூகம் வெகுண்டு எழுந்துள்ளது.
நடிகைக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி, மத்திய, மாநில உள்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக, தேசிய கொடவா கவுன்சில் தலைவர் நாச்சப்பா கூறியிருந்தார்.
இதுகுறித்து பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டியில், ''நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, தேசிய கொடவா கவுன்சில் தலைவர் நாச்சப்பா எழுதியதாக கூறப்படும் கடிதம் எனக்கு இன்னும் வரவில்லை.
''என் அலுவலகத்திற்கு வந்து உள்ளதா என்று தெரியவில்லை. அலுவலக ஊழியர்களிடம் விசாரிக்கிறேன்,'' என்றார்.